Print Sudoku
இலவசமாக அச்சிடக்கூடிய சுடோகு புதிர்கள்
ஒரு 9×9 சுடோகுவை அச்சிடுங்கள் அல்லது அதிகபட்சம் 60 புதிர்கள் கொண்ட சிறு புத்தகத்தை உருவாக்குங்கள். கடினத்தன்மையையும் ஒரு தாளில் எத்தனை புதிர்கள் வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுங்கள். உடனே அச்சிடலாம் அல்லது PDF கோப்பைப் பிறகு பயன்படுத்தச் சேமிக்கலாம். பென்சிலால் தீர்க்க ஒரு புதிர், பயிற்சிக்குப் பல புதிர்கள் அல்லது பயணத்துக்கு ஒரு சிறு புத்தகம் எனத் தயார் செய்யலாம்.
முதல் முறையாக விளையாடுகிறீர்களா? தொடங்குவதற்கு முன் சுடோகு விதிகளையும் அடிப்படைத் தீர்வு முறைகளையும் படியுங்கள்.

சுடோகு அல்லது புதிர்ப் புத்தகத்தை அச்சிடுவது எப்படி?
- கடினத்தன்மையைத் தேர்ந்தெடுத்து, Number of games per page என்பதில் ஒரு பக்கத்துக்கு 1 முதல் 6 புதிர்கள் வரை தேர்ந்தெடுங்கள்.
- ஒரு பக்கத்தைச் சேர்க்க Add a page என்பதைத் தேர்ந்தெடுங்கள். ஒரு புத்தகத்தில் அதிகபட்சம் 10 புதிர்ப் பக்கங்கள் இருக்கலாம். தேவையற்ற பக்கங்களை முன்னோட்டத்தில் நீக்கலாம்.
- Paper size என்பதில் A4 அல்லது US Letter என்பதைத் தேர்ந்தெடுங்கள். விடைகளையும் சேர்க்க விரும்பினால் Include solutions என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
- அச்சிடுவதற்கான PDF கோப்பைத் திறக்க Print என்பதையோ, ஒரு நகலைச் சேமிக்க Download PDF என்பதையோ தேர்ந்தெடுங்கள்.
ஒரு பக்கத்தில் எத்தனை சுடோகு புதிர்களை அச்சிடலாம்?
ஒரு தாளில் ஒரு புதிரை வைத்தால் கட்டம் மிகப் பெரிதாக இருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் வரக்கூடிய எண்களைக் குறித்துக்கொள்ள அதிக இடம் கிடைக்கும். இரண்டு புதிர்களை வைத்தாலும் குறிப்புகள் எழுத இடமிருக்கும். காகிதத்தைச் சேமிக்கவோ பயணத்துக்குச் சிறு புத்தகம் தயாரிக்கவோ ஒரு தாளில் ஆறு புதிர்கள் வரை வைக்கலாம்.
அச்சுப்பொறியில் உள்ள காகிதத்தின் அளவையே PDF கோப்புக்கும் தேர்ந்தெடுங்கள். PDF கோப்பில் உள்ள கட்டங்களின் அளவு மாறாமல் இருக்க, உண்மையான அளவில் அச்சிடுங்கள். கட்டங்கள் கறுப்பு மையில் அச்சிடப்படும். ஒவ்வொரு 3×3 தொகுதியையும் சுற்றியுள்ள தடித்த கோடுகள் அவற்றைத் தாளில் எளிதாக வேறுபடுத்த உதவும்.
சுடோகுவின் கடினத்தன்மையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
விதிகளைக் கற்றுக்கொண்டிருந்தாலோ தாளில் தீர்த்துப் பழகினாலோ எளிய சுடோகுவில் தொடங்குங்கள். தொடர்ந்து பயிற்சி செய்ய Medium நிலையையும், தீர்க்க அதிக நேரம் எடுக்கும் புதிருக்கு Hard நிலையையும் முயன்று பாருங்கள். அனுபவமுள்ள வீரர்களுக்கு Expert, Master நிலைகள் கூடுதல் சவாலைத் தரும். Master பிரிவில் Young Master முதல் Supreme Master வரை ஐந்து படிநிலைகள் உள்ளன. இவற்றை சுடோகு புதிர்களின் பட்டியலில் ஒப்பிடலாம்.
விடைகளுடன் சுடோகுவை அச்சிடுவது எப்படி?
Include solutions என்பதைத் தேர்ந்தெடுத்தால் PDF கோப்பின் இறுதியில் விடைகள் தனிப் பக்கங்களில் சேர்க்கப்படும். உங்கள் புதிருக்குக் கீழுள்ள எண்ணைப் பார்த்து, அதே எண்ணுடைய விடையைக் கண்டறியுங்கள். தீர்க்கும்போது விடைகளைப் பார்க்க விரும்பாவிட்டால், புதிர்ப் பக்கங்களை மட்டும் அச்சிட்டு, விடைகளை PDF கோப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.
தாளில் தொடங்கிய சுடோகுவை இணையத்தில் தொடர முடியுமா?
ஆம். தாளின் கீழே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் அதே புதிர் TheSudoku.com தளத்தில் திறக்கும். தாளில் பல புதிர்கள் இருந்தால், உங்கள் புதிருக்குக் கீழே அச்சிடப்பட்ட எண்ணைத் தேர்ந்தெடுங்கள். தாளில் ஏற்கெனவே கண்டுபிடித்த எண்களை உள்ளிடுங்கள். தொடர்ந்து தீர்க்க முடியாவிட்டால் விளையாட்டில் உள்ள குறிப்பைப் பயன்படுத்தலாம்.
